பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்த பாரிவேந்தர் எம்.பி..!
50 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள அரியலூர் நாமக்கல் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார். பிரதமரை நேரில் சந்தித்த பாரிவேந்தர் எம்பி மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் தனது பெரம்பலூர் மக்களவை தொகுதியில் புதிய ரயில் வழித்தடங்கள் இல்லாததால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்க வில்லை என தெரிவித்துள்ளார். அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல் வரை 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே பாதை அமைப்பதற்கான கள ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை என கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தான் கடந்த 6ஆம் தேதி ஆலோசித்த போது அதை நிறைவேற்றுவதற்காக ஆதரவு தெரிவிப்பதாகவும் பாரிவேந்தர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நாள்வரை பெரம்பலூர் தொகுதியில் ரயில்வே வழித்தடம் இல்லாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.






