சாய்பாபா சிலையை உடைத்த மர்ம நபர்கள்..!
விழுப்புரம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாய்பாபா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரும்பை கிராமத்தில் சீரடி சாய்பாபாவுக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயில்கள் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு கருவறையில் வைப்பதற்கான சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தியதோடு எரித்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





