திருமணம் செய்ய வலியுறுத்திய காதலி பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர். பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் கல்லூரியில் படிக்கும்போது இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கடந்த 16ஆம் தேதி அவரை நேரில் சந்தித்து திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை அவரின் மீது ஊற்றி தீவைத்து விட்டு சிவகுமார் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




