நிக்கி கல்ராணிக்கு விரைவில் திருமணமா..?
நடிகை நிக்கி கல்ராணிக்கு விரைவில் தமிழ் நடிகர் ஆதியுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டார்லிங் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
மரகதநாணயம் படத்தில் நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விழாவில் ஆதியும், நிக்கிகல்ராணியும் பங்கேற்று புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படி ஒரு செய்தி பரவியது.
இந்தநிலையில் ஆதிக்கும், நிக்கிகல்ராணி திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த வருடம் திருமணம் நடைபெறும் என தெரிகிறது. இருப்பினும் அவர்கள் இருவருமே தற்போது வரை உறுதியாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




