பாலியல் தொல்லை கொடுப்பதாக சிறுமி அளித்த புகார்..!
பாலியல் தொல்லை கொடுப்பதாக செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோ தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமியின் வீடியோவில் தனது உறவினர் ஒருவர் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை அளிக்கிறார் என்று போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். சிறுமி குறிப்பிட்ட தினேஷ், எல்லப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே நேரம் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கொடுத்த புகாரின் பேரில் வீடியோ வெளியிட்ட பெண்ணின் அண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் அந்த வீடியோவை மேற்கொண்டு பகிர வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




