ரஷ்ய பூனைகளுக்கு உக்ரைனில் தடை..!
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நிலவி வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்யாவிற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது ரஷ்ய பூனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தொடங்கிய நிலையில் போர் ஏழு நாட்கள் எட்டியது. ஒவ்வொரு நாளும் முக்கிய நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பேசுவதை கண்டு கொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவருகிறது.
ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் பல இடங்களில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்பொழுது ரஷ்யப் படைகளை உள்நாட்டில் இறக்குமதி செய்ய உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.






