மக்கள் அனைவரும் ரூ.10 நாணயத்தை தயக்கமின்றி பயன்படுத்துங்கள்..!
பத்து ரூபாய் நாணயங்களை சட்டபூர்வ பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை எனக் கருதப்படுவது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். மக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
சில இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை ஏற்க மறுப்பதாக புகார்கள் வருவதால் ரிசர்வ் வங்கி அவ்வப்போது விழிப்புணர்வு செய்திகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





