--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.?

4

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரொனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இருந்தபோதிலும் பள்ளிகளில் சமூக இடைவெளி, முககவசம் இவைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும் இதனை பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதனையடுத்து தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon