கங்கை நதியில் கொரோனா சடலங்கள் மிதந்ததா?
கொரொனா இரண்டாவது அலையின் போது கங்கை நதியில் சடலங்கள் மிதந்ததற்கான தகவல்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரொனாவின் 2-வது அலையின் போது இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மாநிலங்களவையில் பேசிய திரிணாமுல் கட்சி உறுப்பினர் கங்கை நதியில் வீசப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த நீர்வளத்துறையை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் கங்கையில் சடலங்கள் மிதந்ததற்கான தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.





