பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷை பாம்பு கடித்து கவலைக்கிடம்…!
கேரளாவில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷை பாம்பு கடித்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து உள்ளார்.
குறிப்பாக பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்தில் குறிஞ்சி என்ற இடத்தில் நாகப்பாம்பு ஒன்றை பிடித்து சாக்குப்பையில் போடும் போது அந்த பாம்பு கடித்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்கட்ட மருத்துவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





