--- --:--:-- --

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்..!

4

புதுச்சேரியில் மின் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மின் துறை தனியார்மயம் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

 

இதன் காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில் மின் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மின்வினியோகம் தடைபடக்கூடாது என்றும், மின்துறை சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் போராட்டம் நடத்தும் நோக்கில் யாரும் ஒரே இடத்தில் கூட கூடாது எனவும் அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon