சமந்தா தான் விவாகரத்து கேட்டார் என நான் கூறவில்லை : நாகர்ஜுனா
சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல குரல்கள் கிளம்பின. அதில் ஒன்றுதான் சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் என நாகார்ஜுனா கூறினார் என்பது.
இதற்கு பதில் கூறும் வகையில் வந்த நாகார்ஜுனாவின் பதிவு நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது. சமீபத்தில் நாகசைதன்யா ஒரு பிரபல முன்னணி சேனலில் பேட்டி அளித்தார். சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கு மகிழ்ச்சி என்றும் சமந்தாவும் நானும் நல்ல நண்பர்கள் தான் எனவும் கூறினார்.
இந்த நிலையில் விவாகரத்தை சமந்தா தான் முதலில் கேட்டார் என நாகர்ஜுனா கூறியதாக செய்தி வெளியானது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நாகர்ஜுனா கூறியபோது சமந்தா நாக சைதன்யா பற்றி எனது அறிக்கையை மேற்கோள் காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் முட்டாள்தனமானது என கூறியிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





