--- --:--:-- --

எனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்..!

14

சேலம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததில் ஒரு பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது.

 

பெருமாகவுண்டம்பட்டி சேர்ந்த ஆனந்தன் – தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

அவரது முதல் குழந்தையை காப்பாற்றிய நிலையில் இரண்டாவது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரம் போராடி குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon