--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் கைது..!

1.1

 திருப்பூரை அடுத்து காங்கேயம் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வருபவர் திருமதி. சிவகாமி இவர் ஏற்கனவே திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் உதவியாளராக இருந்தவர். தாராபுரத்தில் வட்டாட்சியர் ஆக இருந்தவர்.

 

இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் வருவாய் நில உரிமைச் சான்றிதழ் சால்வன்ஸ் பெறுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது விசாரணையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

 

காங்கேயம் அருகே பொங்கலூர் வருவாய் ஆய்வாளராக இருந்த செந்தில்குமார் என்பவரை கடந்த மாதத்தில் லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.திருப்பூர் மாவட்டத்தில் அடுக்கடுக்காக அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்படுவது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Right Menu Icon