இரண்டு ரயில்களுக்கு நடுவே பாய்ந்தோடிய குதிரை..!
இரண்டு ரயில்களுக்கு நடுவில் பாய்ந்தோடிய குதிரையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜனவரி மாத தொடக்கத்தில் எகிப்தில் ஒரு வெள்ளை குதிரை ஓடும் ரயிலுக்கும் நின்றுகொண்டிருந்த ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இதனை கண்டு ஓடும் ரயிலில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். அதே சமயம் இரண்டு ரயில்களுக்கு இடையில் மின்னல் வேகத்தில் குதிரை ஓடிக் கொண்டிருந்தது.
பின்னர் அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்றது. அது எவ்வித காயமும் இல்லாமல் சென்றதைப் பார்த்த பயணிகள் ஆரவாரம் செய்தனர். ஆபத்தான நிலையில் சிறிதளவு பதற்றமின்றி ஓடி தப்பித்த குதிரையின் செயல் பலருக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.





