காதலியின் வீட்டிலேயே திருடிய காதலன்
பேஸ்புக்கில் ஏற்பட்ட பழக்கத்தால் காதலனான நபர் தன் காதலியின் வீட்டில் கைவரிசை காட்டியதால் போலீசில் சிக்கினார். சென்னை திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் பவித்ரா. செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 12ஆம் தேதி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அமரர் ஊர்தி நிறுவனம் நடத்தி வரும் தன் கணவர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் பணம் மற்றும் பீரோவில் இருந்த 21 சவரன் நகைகள் திருடு போனதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதன் பேரில் சிசிடிவி காட்சிகளை பின்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது பவித்ராவின் வீட்டில் இருந்து வந்த ஒருவர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
பவித்ராவின் செல்போனில் இருந்து சுமன் என்பவர் இந்த எண்ணிற்கு அடிக்கடி போன் செய்ததும் தெரிய வந்த நிலையில் போலீசார் அவரை விசாரித்தனர். அப்பொழுது பவித்ராவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது தெரிய வந்தது.
காதலனே அந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





