தேசிய கொடியை ஏந்தி வந்த குட்டி யானை..!
தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடுயானைகள் வளர்ப்பு முகாமில் 20 யானைகள் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து யானைகளும் வரிசையாக அணிவகுத்தன. குட்டி யானை ஒன்று தனது தும்பிக்கையால் தேசியக்கொடியை கொண்டுவந்து வனசரகரிடம் கொடுத்தது.
வனசரகர் தேசியக் கொடியை ஏற்றும் போது அணிவகுத்து நின்று யானைகள் எழுப்பிய குரல் சத்தம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது.






