ஒமைக்ரானுடன் தொற்று ஓயும் என கணிப்பது ஆபத்தானது..!
ஓமிக்ரான் திரிபுடன் கொரொனா தொற்று முடிந்துவிடும் என்று கணிப்பது மிக ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரொனா பரவி பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
உயிரிழப்புகளை குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் இந்த நோய் தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றும் இது தான் கடைசி தீர்வாக இருக்கும் என்றும் கணிப்பது மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





