--- --:--:-- --

10 வயது சிறுமியை வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை..!

2

திருவாரூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

தனியார் கேட்டரிங் சர்வீஸ் இல் பணிபுரிந்து வரும் நபர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் அது குறித்து கூறியுள்ளார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon