சொகுசு பங்களாவை விட்டு வெளியேறவேண்டும்..!
லண்டன் சொகுசு பங்களா வீடு வாங்கிய வங்கிக் கடனை திருப்பி செலுத்தாததால் பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்று விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார்.
2016ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த இந்தியா மேற்கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்களாவுக்காக 2012 ஆம் ஆண்டு வங்கியில் 185 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
5 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலையில் கடனை திருப்பி செலுத்தாததால் 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனை அடுத்து சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா வெளியேறுமாறு கடந்தாண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சொகுசு பங்களாவை விட்டு குடும்பத்தோடு வெளியேறவும், பங்களாவை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





