கடலில் வாழ்ந்த ராட்சத பல்லி..!
180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல் டிராகன் என்று அழைக்கப்படும் அரக்க பல்லியின் எலும்புக்கூடு இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஜோடொவிஸ் என்ற அதிகாரி ருட்லாண்ட் என்ற பகுதியில் நில மறுசீரமைப்புகாக பள்ளம் தோண்டியபோது களிமண் குழாய் போன்ற வடிவங்கள் புதையுண்டு இருப்பதை கண்டார். சந்தேகமடைந்து மேலும் நெருங்கி பார்க்க அது ஒரு உயிரினத்தின் முதுகெலும்பு மற்றும் பெரிய தாடை எலும்பு என்பதை உறுதி செய்தார்.
பின்னர் தொல்லியல் அதிகாரி உதவியுடன் மேலும் ஆராய்ந்து பார்க்க அது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராட்சத பல்லியின் எலும்புக்கூடு என்பதை உறுதி செய்தனர்.
10 அடி நீளம் கொண்ட இந்த எலும்பானது 10 டன் எடை கொண்டதாக இருந்தது. இந்த கடல் வாழ் ராட்சத பல்லி இனம் ஜூராசிக் காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவையாக இருக்கும்.





