--- --:--:-- --

சீனா உருவாக்கிய செயற்கை சூரியன்..!

8

70 லட்சம் கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள செயற்கை சூரியன் தொடர்ந்து 15 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. அண்மை காலமாக சீனா உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறது. தன் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக சீனாவும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

 

இதனை தொடர்ந்து தற்போது சீனா உருவாக்கியுள்ள செயற்கை சூரியன் தொடர்ந்து 17 நிமிடங்கள் வீசி சாதனை படைத்துள்ளது. சீனா கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

அந்த திட்டத்திற்காக சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் வரை செலவழித்து உள்ள நிலையில் தற்போது அந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது. ஆரம்பத்தில் மிக குறைந்தளவிலான ஒளியை மட்டுமே உற்பத்தி செய்த முடிந்தது. இந்த செயற்கை சூரியன் தற்போது 7 கோடி டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

 

Right Menu Icon