நீட் தேர்வு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..!
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடவடிக்கை எடுக்க ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கைக்காக வலியுறுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டு அவர் தமிழக மக்களை சந்திக்க மறுப்பதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
பிரதிநிதிகளைச் சந்திக்க மறுப்பது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் நீட்டுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருந்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு 100 விழுக்காடு ஆதரவு தருவோம் என பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





