--- --:--:-- --

ரமணா பட பாணியில் சிகிச்சை அளித்த மருத்துவமனை..!

4

ண்டலூர் அருகே மருத்துவமனையின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து சுயநினைவு இல்லாமல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

கூலித்தொழிலாளியின் மகன் ராஜன் என்பவர் கடந்த மாதம் 17ஆம் தேதி விபத்தில் சிக்கினார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

உடலில் எந்தவித காயமும் ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளிப்பதாக கூறி ரமணா திரைப்பட பாணியில் மூன்று லட்சம் ரூபாய் பணம் வசூலித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினார். தகவல் அறிந்து வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது ரஞ்சித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும், இயற்கையாகவே சுயநினைவு வந்தால் மட்டுமே உண்டு என்று பெற்றோரிடம் தெரிவித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

மூளையில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் கருவி மூலமாக சிகிச்சை அளித்ததாகவும் கூறப்பட்டது. யாராவது குரல் கொடுத்தால் மட்டுமே கண்விழித்து பார்ப்பதாகவும் அவர் சிகிச்சைக்கு வந்த நாள் முதல் பேசவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Right Menu Icon