புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!
புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து வகை உணவகங்களிலும் 50 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் வருகிற 31-ஆம் தேதி வந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானக் கடைகளிலும் 50 % வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ,வணிக வளாகங்களில் 50 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி ம என அறிவிக்கப்பட்டுள்ளது.






