--- --:--:-- --

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்..! எவற்றிற்கெல்லாம் தடை..?

6

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

பொதுப் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் பயணிகள் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

காப்பகங்கள், மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரி தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை விடபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து பொங்கல் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon