வெளியாகியுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்..!
நாளை முதல் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.
இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஓட்டுனர், நடத்துனர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாளை முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு. பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை, மருத்துவமனையில் பரிசோதனை கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் செயல்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மருந்தகங்கள், பால், ஏடிஎம்கள், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல் டீசல் பங்குகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





