6 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!
தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரவு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. ஓமிக்ரான் மற்றும் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.
எனவே, தமிழ்நாட்டில் ஆறாம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





