--- --:--:-- --

அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு..!

1

ஓமிக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரொனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார் என்றும் முக கவசம் அணிவது போன்ற வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

கொரொனா பாதிப்பு ஏற்படுவதாகவும் நுரையீரல் பாதிப்புகள் குறைவாக உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon