--- --:--:-- --

இம்ரான்கான் முன்னாள் மனைவி ரீஹம்கான் கார் மீது துப்பாக்கிச் சூடு..!

2

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரீஹம்கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உறவினர் திருமணத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 

இருவரும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ரீஹம் கானுடன் இருந்த காவலர்கள் அவரை மீட்டு வேறொரு காரில் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர் இதுகுறித்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ரீஹம்கான், இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் என குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon