பைபாஸில் இறந்த பாம்பை வீசியதால் விபத்து..!
விழுப்புரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த இரும்பு உருளை மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து கோவைக்கு பல டன் எடை கொண்ட பழைய இரும்பு பொருட்கள் வரலாறு மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த லாரி விழுப்புரம் மாவட்டம் பேரையூர் அருகே சென்றபோது அந்த பகுதி சிறுவர்கள் சிலர் இறந்த பாம்பை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் வேகமாக சென்ற லாரியை உடனடியாக நிறுத்த முயன்றார்.
இதனால் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட இரும்பு உருளை சாலையில் விழுந்துள்ளது. இந்நிலையில் லாரிக்கு பின்னால் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





