--- --:--:-- --

என்னுடன் சேர்ந்தால் நீண்ட காலம் வாழ்வாய் எனக்கூறிய சாமியார்..!

4

புனே மாவட்டத்தில் பிம்பிள்வாண்டி என்ற பகுதியில் விலாஸ் பாபுராவ் பவார் என்று சாமியார் இருக்கிறார். இவரிடத்தில் வந்த ஒரு பக்தையிடம் உனக்கு வயிற்றில் மூன்று கட்டிகள் இருப்பதாக கூறியுள்ளார். நீண்ட காலம் வாழ வேண்டுமென்றால் மறைவிடத்தில் மச்சம் உள்ளவருடன் சேர வேண்டும் என்றும் தனக்கு அந்த மாதிரி மச்சம் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

 

அந்த பெண்ணை போனில் அழைத்து தன்னுடன் சேர்ந்தால் நிகழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்வார் என்றும் கட்டாயப்படுத்தி உள்ளார். சாமியாரின் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் டிசம்பர் 21ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

ஆசையுடன் வந்த சாமியாரை தட்டி தூக்கிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாமியார் மீது 3 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon