புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை முதல் தீவிர கண்காணிப்பு..!
சென்னையில் நாளை காலை முதல் மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளோம் எனவும் விதிகளை மீறும் தனிநபர் மற்றும் திருமண மண்டபங்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர், சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். பின்னர் அவர்களை சந்தித்து வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் அரசு விதிமுறைகளை மக்கள் மீற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.





