--- --:--:-- --

அடுத்தடுத்து மோதிய 7 வாகனங்கள்..!

5

பெங்களூரு நலமங்களா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

 

நலமங்களாவில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று சரக்கு வாகனத்தை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. பின்னால் வந்த மற்றொரு பேருந்து மற்றும் இரண்டு கார்கள் உட்பட ஏழு வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கியது.

 

இந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுனரின் கவனக் குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon