--- --:--:-- --

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு..!

6

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

 

பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோட்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

 

நாடெங்கும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்ததால் விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்து அவற்றின் விலையை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுத்தனர்.

 

Right Menu Icon