கத்திக் குத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய டி-சர்ட் அறிமுகம்..!
கத்தி குத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடைய டி சர்ட் ஒன்றை பிரிட்டனிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் நிகழ்ந்துவரும் கத்திக்குத்து என்பது தினசரி வாழ்க்கையில் சர்வ சாதாரணமான விஷயமாக இருக்கும் அளவிற்கு கருதப்பட்டு வருகிறது. இதில் இருந்து பொது மக்களை காக்க வேண்டும் என்பதற்காக பிரிட்டனிலுள்ள பிபிஎஸ்எஸ் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் விலை 16 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வலுவான கார்பன் பைபரை வைத்து தயாரிக்கப்பட்ட இந்த டீ சர்ட்டை அணிந்திருந்தால் கத்திக்குத்து உள்ளிட்ட தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பெரிதும் உதவுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டீஷர்ட் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






