ஓமிக்ரான் பரவல் குறித்து பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை..!
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் ஓமிக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது.
மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பதிவாகியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த ஓமிக்ரான் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஓமிக்ரான் பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.






