--- --:--:-- --

4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்..!

12

மிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் வரும் 17ஆம் நாள் வரை தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி, குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon