ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த பிபின் ராவத் கவலைக்கிடம்..!
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் குடும்பத்தினரோடு பயணம் செய்ததாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள், 9 ராணுவ கமாண்டோ வீரர்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிலர் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






