--- --:--:-- --

பிபின் ராவத்தின் மகளை சந்தித்த  ராஜ்நாத்சிங்..!

1

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் டெல்லி இல்லத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மகளை ராஜ்நாத்சிங் சந்தித்து பேசினார்.

 

கோவை சூலூரில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டுப்பகுதியில் மதியம் 12 மணிக்கு விபத்தில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்து நொறுங்கி ஹெலிகாப்டர் சுமார் ஒன்றரை மணி நேரம் தீப்பற்றி எரிந்ததாக தகவல் வெளியாகியது.

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பிறகு உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த படைகளின் தலைமைத் தளபதி நிலை இதுவரை தெரியவில்லை. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த அவரது மனைவியின் நிலையும் தெரியவில்லை. இந்திய விமானப்படையில் MI 17 v5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்ததாக விமானப்படை தகவலை தெரிவித்துள்ளது.

Right Menu Icon