--- --:--:-- --

காரில் அழுகிய நிலையில் மனித உடல் மீட்பு..!

5

மதுரையில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோச்சடை பகுதியில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

 

இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் அருகில் சென்று பார்த்தபோது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

 

உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon