5வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்..!
கோவையில் 5 வயது சிறுமிக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சரவணம்பட்டியை சேர்ந்த சாகிர் உசேன் என்ற அந்த முதியவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்ததோடு சிறுமியை கொஞ்சுவது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
முதியவரின் அருவருக்கத்தக்க செயலை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மாடியில் இருந்து வீடியோ எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்ததாக செல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.




