--- --:--:-- --

முழு ஊரடங்கு அமல்படுத்த தயார்..!

4

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழு முடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவிலான வாகனங்கள் இயக்குவதால் மற்றும் பயிர் கழிவுகள் இருப்பதால் சமீபகாலமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முழு முடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து பொதுமக்கள் டெல்லி புறநகர் பகுதிகளான அண்டை மாநிலங்களிலும் அமல்படுத்தினால் மட்டுமே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் என நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வட மாநிலங்கள் பயிர் கழிவுகள் இருப்பதால் டெல்லியில் 10% தான் காற்று மாசு ஏற்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

காற்று மாசை கட்டுப்படுத்த ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாகனம் இயக்கும் திட்டம், டெல்லியில் நுழைய கண்டெய்னர் லாரிகளுக்கு தடை மற்றும் கடுமையான பொது முடக்கம் ஆகிய மூன்று பரிந்துரைகளை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

மேலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக டெல்லி அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon