--- --:--:-- --

படப்பிடிப்பிற்காக மும்பை சென்றார் நடிகர் சிம்பு..!

3

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சிம்பு மும்பை சென்றுள்ளார். தமிழகத்தில் 47வது படமாக உருவாகிறது வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகியுள்ள படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

 

கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி அண்மையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது.

 

படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு விமானத்தில் செல்ல புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களை பகிர்ந்திருக்கிறார். அதோடு அவர் மும்பை சென்று ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon