மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது வாய் விட்டு அழுவதற்காக பிரத்யேக அறைகள்..!
ஸ்பெயின் தலைநகர் மார்க்ரெட்டில் மக்கள் வாய் விட்டு அழுவது மன அழுத்தத்தை போக்கி கொள்ள பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் ஆண்டுதோறும் 3500 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.
இதனால் மக்கள் கவலைகளை வெளியே கூறாமல் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றனர்.
இதையடுத்து மக்கள் வாழ்வதற்கு வசதியாக தலை நகரின் மையப்பகுதியில் ஸ்பெயின் அரசு பிரத்தியேக கட்டடத்தை அமைத்துள்ளது. தொலைபேசியில் மனநல மருத்துவர் தடுப்பு மற்றும் உளவியல் ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







