--- --:--:-- --

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்..!

12

மிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து பேசியவர் பிரகாஷ் ராய் என்ற எனது பெயரை பிரகாஷ்ராஜ் என இயக்குனர் பாலச்சந்திரன் மாற்றினார். அது தன் தலையெழுத்தை மாற்றி தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் என்னை அழைத்துச் சென்று உள்ளது என கூறியுள்ளார்.

 

ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது பிரகாஷ்ராஜ் அந்த படத்தில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon