--- --:--:-- --

மாணவரை எட்டி உதைத்த ஆசிரியர் கைது..!

1

கடலூர் மாவட்டத்தில் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டி போட வைத்து பிரம்பால் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் என்பவர் கடுமையாக அடித்துள்ளார்.

 

இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டி உதைத்துள்ளார். சக மாணவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவன் அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon