--- --:--:-- --

நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது வாக்கு எண்ணிக்கை..!

6

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

 

9 மாவட்டங்களில் 144 மாவட்ட கவுன்சிலர்கள், 1,189 ஒன்றிய கவுன்சிலர், 2,901 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 22,581 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் முகவர்கள் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வர வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon