சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு..!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் 15 ரூபாய் உயர்த்தியுள்ளது இல்லத்தரசிகள் இடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வை அடுத்து சமையல் எரிவாயு விலை 915 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இரண்டு மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. செப்டம்பர் மாதம் சமையல் எரிவாயு உருளையின் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ஒருசிலர் 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மேலும் 15 ரூபாய் அதிகரித்துள்ளது.






