--- --:--:-- --

அரியலூரில் 50 க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல்..!

4

ரியலூர் அருகே மர்ம காய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கும் மர்ம காய்ச்சல் பரவி உள்ளதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர் . அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமரியாறு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

 

காய்ச்சலுக்காக தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அங்கு சுகாதார பணிகளை மேம்படுத்த உத்தரவிட்டார்.

 

மர்ம காய்ச்சலுக்கு மேலும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon